/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...
ADDED : ஏப் 17, 2024 12:53 AM
கோடை விடுமுறை துவங்கவுள்ளது. லீவ் என்றாலே பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். மொபைலில் அதிக நேரம் செலவிடும் பழக்கத்தால் சிறுவர்களுக்கு நினைவாற்றல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ். இது அவர்களை மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலும் வைத்துக் கொள்ளும். கூடவே, விடுமுறை முடியும்போது, ஒரு புதிய திறன் கற்றுக்கொண்ட திருப்தியும் ஏற்படும்.
அர்பன் கோச்சிங் சென்டர்
ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள 10 முதல் வயது வரம்பில்லை. மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. முகவரி: பூம்புகார் நகர், இடையர்பாளையம்.
தொடர்புக்கு: 96260-06331.
சிவாலயா நாட்டிய பள்ளி
பரதநாட்டியம், போல்க் டான்ஸ், பாட்டு, ஆர்ட் அண்ட் கிராப்ட், டிராயிங் அண்ட் கலரிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகளில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. முகவரி: மலுமிச்சம்பட்டி.
தொடர்புக்கு: 97507-65557.
எம்.கே.எம். தட்டச்சுப் பயிற்சி
தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சி.ஓ.ஏ., தமிழ் சுருக்கெழுத்து ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: கல்வீராம்பாளையம், மருதமலை சாலை. தொடர்புக்கு: 99441-23314.
கிருஷ்ணாஞ்சலி மியூசிக்கல் டிரெய்னிங் சென்டர்
கர்னாடிக்கல் வோக்கல், கிளாசிக் டேன்ஸ், கீபோர்டு, கிட்டார், வயலின், டிராயிங், புல்லாங்குழல் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பதிவுக் கட்டணம் இல்லை.
முகவரி: ஆர்.எஸ்.புரம்.
தொடர்புக்கு: 98946-86867.
ஸ்டோரி சீட்ஸ்
சிறுவர் நாடகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். முகவரி: ஸ்ரீ தக் ஷா ஆத்வ்யா, வடவள்ளி. தொடர்புக்கு: 72001-66607.
ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளி
புட்பால், கிரிக்கெட், ஸ்விம்மிங், ஸ்கேட்டிங், பேஸ்கட்பால் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 6 முதல் 15 நயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். ஆயிரத்து 999 ரூபாய் பதிவுக் கட்டணம். முகவரி: காரமடை. தொடர்புக்கு: 75982-84555, 95435-66660.
க்ரிவின் அகாடமி
பாட்டில் ஆர்ட், விளையாட்டு, அணி ஒருங்கிணைப்பு, அறிவியல் மற்றும் இயற்கை சார்ந்த பல்வேறு அம்சங்களுடன் சிறுவர் சிறுமியருக்கு, சாய்பாபா கே.கே., புதுார் பகுதியில் ஏப்., 24ம் தேதி முதல் மே, 11ம் தேதி வரை சம்மர் கேம்ப் நடக்கிறது.
தொடர்புக்கு: 90807 77512.
ஸ்கேட்டிங் பயிற்சி முகாம்
கோடை விடுமுறையில் ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ள விரும்பும் குழந்தைகளுக்கு, தமிழ் ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் ஏப்., 22ம் தேதி முதல் மே, 17ம் தேதி வரை இரு பிரிவுகளாக சி.எம்.ஐ.எஸ்., பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொடர்புக்கு, 86672 66447.
கோடை விடுமுறையில், இது போன்ற இலவச/ கட்டண பயிற்சி வகுப்புகள் நடத்துவோர், 98940 09282 என்ற எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம். இலவசமாக பிரசுரிக்கப்படும்.

