/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு!
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு!
ADDED : ஏப் 08, 2024 12:31 AM

கோடை விடுமுறை துவங்கவுள்ளது. லீவ் என்றாலே, பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். இதனால் நினைவாற்றல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ். இது அவர்களை மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலும் வைத்துக்கொள்ளும். கூடவே, விடுமுறை முடியும்போது, ஒரு புதிய திறன் கற்றுக்கொண்ட திருப்தியும் ஏற்படும்.
பி.எஸ்.ஜி. பப்ளிக் ஸ்கூல்
பாஸ்கெட் வேவிங், பர்லப் சூவிங், நேச்சர் மொசைக் ஆர்ட், பாட் பெயின்டிங், ஒரிகாமி, ஸ்டிராடெஜிக் கேம்ஸ், ஜர்னி வித் புக் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மெட்டீரியல் உட்பட இந்த பயிற்சிக்கு, மொத்தம் 2,300 ரூபாய் கட்டணம். 6 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம். காலை 9.30 முதல் பகல் 12 மணி வரை, வகுப்பு நடைபெறும்.
முகவரி: பீளமேடு. தொடர்புக்கு: 88070- 11911.
பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லுாரி
பாஸ்கெட் பால், பேட்மின்டன், புட்பால், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 2,000 ரூபாய் கட்டணம். 2 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
முகவரி: பீளமேடு. தொடர்புக்கு: 0422-- 4344777.
பெர்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி
ஸ்விம்மிங், டென்னிஸ், பேட்மின்டன், பாஸ்கெட் பால், டேபிள் டென்னிஸ், சிலம்பம், களரி, அடிமுறை, கராத்தே, ஸ்கேட்டிங், டேக்வாண்டோ, பென்சிங் வுஸு -சைனீஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ், யோகா, வாலிபால், பாக்ஸிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
முகவரி: உப்பிலிபாளையம். தொடர்புக்கு: 81481 -90834.
தி மாஸ்க் டான்ஸ் அகாடமி
டான்ஸ், யோகா, கராத்தே ஆகிய மூன்று பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்கான கட்டணம் 3 ஆயிரம் ரூபாய். ஒரு பயிற்சிக்கு ஆயிரத்து 500 ரூபாய். முகவரி: பீளமேடு.
தொடர்புக்கு: 97516- 09166, 77086 -74611.
ஹேப்பி ட்ரீ கிட்ஸ் ஸ்கூல்
டிராயிங், பெயின்டிங், ஆர்ட் அண்ட் கிராப்ட், ஸ்போக்கன் இங்கிலீஷ், போனிக் சவுண்ட்ஸ், ஹேண்ட்ரைட்டிங், டான்ஸ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 3 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம். முகவரி: நவாவூர் பிரிவு,- சுல்தானியாபுரம் செல்லும் வழி.
தொடர்புக்கு: 97870- 49200, 93606 -97910.
கோடை விடுமுறையில், இது போன்ற இலவச/ கட்டண பயிற்சி வகுப்புகள் நடத்துவோர், 98940 09282 என்ற எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம். இலவசமாக பிரசுரிக்கப்படும்.

