/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு!
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு!
ADDED : ஏப் 08, 2024 11:28 PM
கோடை விடுமுறை துவங்கவுள்ளது. விடுமுறை என்றாலே பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். மொபைலில் அதிக நேரம் செலவிடும் பழக்கத்தால், சிறுவர்களுக்கு நினைவாற்றல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ். இது அவர்களை மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலும் வைத்துக் கொள்ளும். கூடவே, விடுமுறை முடியும்போது, ஒரு புதிய திறன் கற்றுக்கொண்ட திருப்தியும் ஏற்படும்.
லாசினமென்
ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹிந்தி, சாக்லேட் மேக்கிங் பார் கிட்ஸ், ஹேண்ட்ரைட்டிங், க்ரோசெட் ஆர்ட், டிராயிங் கிளாஸ், ரெசின் ஆர்ட், கேக் பேக்கிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சி கட்டணம் ரூ.300 -1500. 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம். முகவரி: கோபால் நாயுடு பள்ளி பின்புறம், பீளமேடு தொடர்புக்கு: 63695- 33556.
ஜிம்னாஸ்டிக் டிரெயினிங் சென்டர்
ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சி அளிக்கப்படுகின்றன. மூன்றரை வயது முதல், 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். சீருடையுடன் சேர்த்து ரூ.4,500 பயிற்சிக் கட்டணம். முகவரி: கணபதி, சங்கனூர் சாலை. தொடர்புக்கு: 63694 -45186.
ஜாய்புல் சம்மர்
பெயின்ட் மேஜிக், ஸ்கில்புல் ஹேண்ட்ஸ், லிட்டில் செப், ஓவன் பிரெஷ், மியூசிக் அண்ட் மூவ்மென்ட்ஸ், ஸ்டிரக்ச்சர்டு கேம்ஸ் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சி கட்டணம் -ரூ.5,500. முகவரி: அனன் இன்டர்நேஷனல் பள்ளி, காளப்பட்டி. தொடர்புக்கு: 88070- 11911.
கோடை விடுமுறையில், இது போன்ற இலவச/ கட்டண பயிற்சி வகுப்புகள் நடத்துவோர், 98940 09282 என்ற எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம். இலவசமாக பிரசுரிக்கப்படும்.

