/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உண்டு உறைவிடப்பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பு
/
உண்டு உறைவிடப்பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பு
ADDED : ஏப் 05, 2024 10:50 PM

உடுமலை : மாவட்ட தேசிய பசுமைப்படையின் சார்பில், லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் உண்டுஉறைவிடப்பள்ளியில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில், மாநில சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, மாவட்ட தேசிய பசுமைப்படையின் சார்பில் மூலிகை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பல்வேறு வகையான மூலிகை செடிகள், பள்ளியில் நடவு செய்யப்பட்டுள்ளன. பள்ளி தலைமையாசிரியர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரபாவதி, இதற்கான ஏற்பாடுகளை செய்தார். மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மூலிகை செடிகளை, ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் நடவு செய்தனர்.

