ADDED : ஏப் 21, 2024 11:59 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை, கடந்த வார விலையில் எவ்வித மாற்றமின்றி, 38 ரூபாயாகவே உள்ளது.
ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், இன்று முதல் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையில் எந்த மாற்றமும் இன்றி, 38 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடும் வறட்சி, கோடை, தண்ணீர் பற்றாக்குறை, பருவ மழை பொய்த்தது, வெள்ளை ஈ தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு, இளநீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. இந்த நேரத்தில், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், தினசரி இளநீர் வரத்து, 1.50 முதல் 2 லட்சம் எண்ணிக்கையில் இருந்தது. தற்போது, 50 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது.
மக்கள் நலன் கருதி, இந்த வாரம் இளநீரின் விலை உயர்த்தப்படவில்லை. ஒரு டன் இளநீரின் விலை, 15,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தார்.

