/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டுக்கூடுக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை இல்லை
/
பட்டுக்கூடுக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை இல்லை
பட்டுக்கூடுக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை இல்லை
பட்டுக்கூடுக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை இல்லை
ADDED : ஆக 24, 2024 11:18 PM
கோவை;கோவை பாலசுந்தரம் ரோட்டில், பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், கோபி, ஈரோடு, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து, விற்பனை செய்து வருகின்றனர்.
மாதம் ஒன்றுக்கு 22 முதல் 25 டன் வரை இந்த அங்காடிக்கு, பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, மழை காரணமாக பட்டுக்கூடு விலை குறைந்தது.
நேற்று முன்தினம் தரமான பட்டுக்கூடு ஒரு கிலோ 538 ரூபாய் வரை விற்பனையானது. அடுத்த ரகம் கிலோ, 460 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம் கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனையானது.
பட்டு விவசாயிகள் கூறுகையில், 'இந்த ஆண்டு பட்டுக்கூடுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் விலை இதுவரை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு நல்ல விலை கிடைத்தது. ஒரு கிலோ 800 முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து 500 அல்லது 550 ரூபாயை தண்டுவதில்லை. ஈரோடு மற்றும் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையால் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்துள்ளது. பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளது. இந்த விலை கட்டுப்படியாகவில்லை' என்றனர்.

