/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'செண்டு மல்லி பூவுக்கு விலை இல்லை': விவசாயிகள் விரக்தி
/
'செண்டு மல்லி பூவுக்கு விலை இல்லை': விவசாயிகள் விரக்தி
'செண்டு மல்லி பூவுக்கு விலை இல்லை': விவசாயிகள் விரக்தி
'செண்டு மல்லி பூவுக்கு விலை இல்லை': விவசாயிகள் விரக்தி
ADDED : மார் 07, 2025 08:11 PM

மேட்டுப்பாளையம்:
செண்டு மல்லி பூ, மிகவும் விலை குறைந்த விற்பனையாவதால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் வாழையும் கறிவேப்பிலையும் அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. பல இடங்களில் சிறிதளவாக காய்கறிகள், தக்காளி மற்றும் செண்டு மல்லி பூ ஆகியவற்றை விவசாயிகள் பயிர் செய்கின்றனர். தற்போது செண்டுமல்லி பூ, மிகவும் குறைந்த விலைக்கு விற்பனையாவதால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாலப்பட்டியைச் சேர்ந்த பூ விவசாயி பொன்னுசாமி கூறியதாவது: ஒரே மாதிரியான பயிர்களை தொடர்ந்து செய்யக்கூடாது என்பதற்காக, வாழை அறுவடை செய்த பின், மூன்று மாதம் இடைவெளியில் காய்கறிகள் மற்றும் செண்டு மல்லி பூச்செடிகள் பயிர் செய்யப்படுகின்றன. சிறிய அளவு விவசாயம் என்பதால் கூலி ஆட்களை வைத்து பூக்கள் அறுவடை செய்தால், கட்டுபடியாகாது. அதனால் குடும்பத்தில் உள்ள இரண்டு மூன்று பேர், காலையில் பூக்கள் அறுவடை செய்து, 8 மணிக்குள் மார்க்கெட் சென்று விற்பனை செய்ய வேண்டும்.
தைப்பூசம் வரை இந்த பூவிற்கு நல்ல விலை கிடைத்தது. அப்போது ஒரு கிலோ, 45 லிருந்து 50 ரூபாய் வரை விலை கிடைத்தது. அதன் பின்பு விலை குறையத் தொடங்கியது. தற்போது ஒரு கிலோ, 13ல் இருந்து 15 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இதில் கிடைக்கும் வருவாய், குடும்பத்தின் பிற தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உபயோகமாக இருந்து வருகிறது. ஆனால் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.