/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீர் தேங்குவதால் பள்ளியில் பாதுகாப்பில்லை
/
மழைநீர் தேங்குவதால் பள்ளியில் பாதுகாப்பில்லை
ADDED : செப் 15, 2024 11:36 PM
வால்பாறை : ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
வால்பாறையில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் உள்ளது ரொட்டிக்கடை. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 61 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் சேர்க்கை ஆண்டு தோறும் சரிந்து வருகிறது.
பள்ளியின் பின்பக்கம், புதர் மண்டி கிடப்பதால் அடிக்கடி சிறுத்தை வருகிறது. மேலும் மயானத்தை ஒட்டி பள்ளி அமைந்துள்ளதாலும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி வருகிறது.
இந்தப்பகுதியை சுற்றியுள்ள பெரும்பாலான மாணவர்கள், வால்பாறை நகரில் உள்ள பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமாரிடம் கேட்டபோது, ''பள்ளியில் நான்கு கட்டடங்கள் உள்ளன. ஆனால், மழை காலத்தில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாத அளவிற்கு, மழை நீர் வகுப்பறையில் தேங்கி நிற்கிறது. வகுப்பறை மேற்கூரையை சீரமைத்து தரவும், சுற்றுச்சுவர் கட்டித்தரவும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.