/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இணைப்பு இருக்கு குடிநீர் வருவதில்லை! அலைமோதும் கிராம மக்கள்
/
இணைப்பு இருக்கு குடிநீர் வருவதில்லை! அலைமோதும் கிராம மக்கள்
இணைப்பு இருக்கு குடிநீர் வருவதில்லை! அலைமோதும் கிராம மக்கள்
இணைப்பு இருக்கு குடிநீர் வருவதில்லை! அலைமோதும் கிராம மக்கள்
ADDED : மே 20, 2024 11:26 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, தாமரைக்குளம் மக்களுக்கு மூன்று மாதங்களாக குடிநீர் வினியோகம் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி தாமரைக்குளம், 1வது வார்டில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், புதிதாக, 30 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது. இதில், 10 இணைப்புகளில் குடிநீர் வருவதில்லை. இதனால், மூன்று மாதங்களாக அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள குடிநீர் குழாய் வால்வில் வரும் கசிவு நீரை பிடித்து மக்கள் சமாளிக்கின்றனர். சிலர், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.
மேலும், இங்கு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட போது, ஒரு சில வீடுகளின் பழைய குழாய் இணைப்பு பாதிக்கப்பட்டது. அதுவும் தற்போது வரை சரியாகவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, மூன்று நாட்களில் இந்த பிரச்னை சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை சரியாகவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் அடுத்த மாதம் பணிகளை முடித்து விடலாம் என, தெரிவித்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'குடிநீர் பிரச்னையை மூன்று நாட்களில் சரி செய்து கொடுக்கிறோம் என தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகத்திடம், குடிநீர் இணைப்பை சரிசெய்ய கூட நிதி இல்லையா என, தெரியவில்லை.
தற்போது கேட்டால் லோக்சபா தேர்தல் நிறைவடைந்த பின் தண்ணீர் வழங்கப்படும் என கூறுகின்றனர். அதுவரை குடிநீருக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை. ஊராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் மீது அக்கறை கிடையாது,' என்றனர்.

