/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சும்மாவா சொன்னாங்க... 'வீட்டை கட்டிப் பார்' என்று!
/
சும்மாவா சொன்னாங்க... 'வீட்டை கட்டிப் பார்' என்று!
சும்மாவா சொன்னாங்க... 'வீட்டை கட்டிப் பார்' என்று!
சும்மாவா சொன்னாங்க... 'வீட்டை கட்டிப் பார்' என்று!
ADDED : ஏப் 30, 2024 11:17 PM
- நமது நிருபர் -
கடந்தாண்டு மார்ச் மாதம் 4 யூனிட் கொண்ட எம்.சாண்ட், ரூ.13 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 6,000 ரூபாய் வரையும், ரூ.16 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்பட்ட பி சாண்ட், 5,500 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது.
முக்கால் இன்ச் ஜல்லி கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 4 யூனிட்டுக்கு 5,500 ரூபாய் வரையும், ஒன்றரை இன்ச் மெட்டல், 4 யூனிட்டுக்கு 4,600 வரையும், கால் இன்ச் ஜல்லி, 4 யூனிட்டுக்கு 4,000 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், வீடு கட்ட நினைத்திருப்போர் மற்றும் வீடு கட்டிக் கொண்டிருப்போர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கட்டுமான பொறியாளர்கள் கூறுகையில், 'வீடு கட்டும் போது, கட்டட உரிமையாளருக்கும், வீடு கட்டும் பொறியாளருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படுகிறது. கட்டுமானப் பொருட்கள் உயரும் போது, சிறு சதவீதம் என்றால், எங்களால் ஏற்க முடியும். ஆனால், விலை அதிகமாக உயரும் போது, ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
'இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. வீட்டு உரிமையாளர்கள் வேறு வழியின்றி, கூடுதலாக செலவழிக்க வேண்டியுள்ளது' என்றனர்.