/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
13 பவுன் திருடிட்டாங்க; பறிகொடுத்தவர் 6 பவுன் மட்டும் புகார்ல எழுதுங்க; போலீஸ்!
/
13 பவுன் திருடிட்டாங்க; பறிகொடுத்தவர் 6 பவுன் மட்டும் புகார்ல எழுதுங்க; போலீஸ்!
13 பவுன் திருடிட்டாங்க; பறிகொடுத்தவர் 6 பவுன் மட்டும் புகார்ல எழுதுங்க; போலீஸ்!
13 பவுன் திருடிட்டாங்க; பறிகொடுத்தவர் 6 பவுன் மட்டும் புகார்ல எழுதுங்க; போலீஸ்!
ADDED : செப் 10, 2024 07:18 AM

கோவை : 13 பவுன் திருட்டு போனதை புகாரில், 6 பவுன் மட்டும் எழுதி தர போலீசார் கூறியதால், அதிர்ச்சி அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன், 45. இவர் சிங்காநல்லுார் நேதாஜிபுரம் சக்தி நகரில் குடும்பத்துடன் தங்கி, அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த, 3ம் தேதி திருநெல்வேலிக்கு, குடும்பத்துடன் சென்றார்.
அப்போது, வீட்டு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த, 13 பவுன் தங்க நகை மற்றும் ரூ.40 ஆயிரம் கொள்ளை போனது. பக்கத்து வீட்டை சேர்ந்த நாகராஜ் வீட்டிலும் ரூ.25 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
கணேசன் தனது மனைவி கிருஷ்ணகுமாரியுடன், சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார், 6 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு போனதாக வழக்கு பதிந்துள்ளனர்.
நாகராஜ் வீட்டில் திருட்டு போனதை, இந்த வழக்கிலேயே சேர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகுமாரி, 6 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு போனதாக வழக்கு பதிந்ததை பார்த்து, 13 பவுன், ரூ.40 ஆயிரம் திருட்டு போயிருப்பதாக திருத்தியுள்ளார்.
அதற்கு போலீசார், 13 பவுன் நகைக்கான பில் மற்றும் பணத்திற்கான ஆதாரத்தை கேட்டு, பாதி நகை திருட்டு போனதாக தான், வழக்கு பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து திரும்பினார்.
பல போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்குகளை, இவ்வாறு தான் பதிவதாகவும், சில சமயங்களில் வழக்கே பதிவது இல்லை என்றும், பாதிக்கப்பட்ட பலர் புலம்புகின்றனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் இது போன்ற வழக்குகளில் தலையிட்டு, பொதுமக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும்.