sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையில் 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா துவங்கியது! குடும்பத்தோடு வந்து 'பர்ச்சேஸ்' செய்யும் மக்கள்

/

கோவையில் 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா துவங்கியது! குடும்பத்தோடு வந்து 'பர்ச்சேஸ்' செய்யும் மக்கள்

கோவையில் 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா துவங்கியது! குடும்பத்தோடு வந்து 'பர்ச்சேஸ்' செய்யும் மக்கள்

கோவையில் 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா துவங்கியது! குடும்பத்தோடு வந்து 'பர்ச்சேஸ்' செய்யும் மக்கள்


ADDED : ஆக 16, 2024 03:32 AM

Google News

ADDED : ஆக 16, 2024 03:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது. குட்டீஸ், இல்லத்தரசிகள், இளம்பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும், குடும்பத்தோடு வந்திருந்து, தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆர்வமுடன் தேடி, 'பர்ச்சேஸ்' செய்துச் சென்றனர். இக்கண்காட்சி, 18ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட மக்களின் தேடலை அறிந்து, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் 'பில்டு, ஆட்டோ மொபைல்' கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழா ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து, கோவையின் நம்பர் ஒன் நாளிதழான 'தினமலர்' மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' என்கிற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியை, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவக்கின.

தமிழக அரசால் சிறந்த கலெக்டராக தேர்வாகியுள்ள கிராந்திகுமார், ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார். கூடுதல் கலெக்டர் ஸ்வேதா, உதவி கலெக்டர் அங்கத்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா ஆகியோர் உடன் பங்கேற்றனர். இவர்களுடன், 'சத்யா ஏஜன்சீஸ்' பொது மேலாளர் ஆபிரஹாம், வர்த்தக மேலாளர் காந்திராஜன், 'நியூமென்ஸ் பர்னிச்சர்' நிர்வாக இயக்குனர் ஹரி பிரசன்னா, 'வுட்ஸ்பா' இயக்குனர்கள் உமேஷ், நிர்மல் உள்ளிட்டோர் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆபரில் ஆடைகள் அள்ளலாம்


ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அனைத்து விதமான ஆடைகளுக்கும் கண்காட்சியில் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஆண்களுக்கான பிராண்டட் டீ சர்ட், டிராக் பேன்ட், ஷார்ட்ஸ் வகைகள் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது; ஆடைகளை அள்ளிக் கொண்டு போகலாம். இது மட்டுமல்லாமல் கேரள வேட்டிகள் எல்லாம் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம், ஆந்திர மாநிலத்தின் 'குராஷ்யா' ஆடைகள் ரூ. 240 முதல் கிடைக்கின்றன. பெண்களுக்கான 3 பீஸ் செட் சுடிதார் வகைகள் 999 முதல், மல்முல் காட்டன் சேலைகள், கோவை காட்டன் சேலைகள் என அனைத்து ஆடைகளுக்கும் சிறப்பான தள்ளுபடி வழங்கப்படுகிறது. கைத்தறி ஆடைகளும் கிடைக்கும். 500 ரூபாய்க்கு மூன்று கைத்தறி கதர் வேஷ்டிகள் கிடைக்கின்றன. திரைச்சீலை, படுக்கை விரிப்புகள், தலையணை, மெத்தை உள்ளிட்டவை வாங்கலாம். வண்ண வண்ண பொட்டு ரகங்கள், ஜிமிக்கி, வளையல், பாரம்பரியமிக்க செயின் வகைகள், அழகு சாதன பொருட்கள் வாங்கலாம்.

வீடு கனவு நனவாகும்


சொந்தமாக வீடு கட்டும் கனவை நனவாக்குவதற்கு புரமோட்டர்ஸ் காத்திருக்கின்றனர். நிலம் மற்றும் வீடு வாங்க கடன் கொடுப்பதற்கு வங்கிகளும் அரங்குகள் அமைத்திருக்கின்றன. வீடு கட்டும் எண்ணத்துக்கு தீர்வு ஏற்படுத்தலாம். அதேபோல், பைக், கார் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது. பைக்குகள், கார்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் காட்சிக்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.

குழந்தைகளின் உலகம்


உங்களின் செல்லக் குழந்தைகளை குஷிப்படுத்த கேம் ஜோன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. படகு சவாரி, வாட்டர் ரோலிங், 12டி பஸ், புல்லட், காளையை அடக்கும் விளையாட்டு உள்ளிட்ட எண்ணற்ற விளையாட்டுகள் இருக்கின்றன. பசியை போக்க, உணவுத்திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இட்லி, தோசையில் ஆரம்பித்து சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பன் பரோட்டா, ஐஸ்கிரீம், பாப்கார்ன் என உணவு வகைகளை ஒரு பிடி பிடிக்கலாம்.

இணையும் கரங்கள்!

'தினமலர்' நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியை, அல்ட்ரா நிறுவனம், கோவை லட்சுமி, வுட்ஸ்பா, நியூ மென்ஸ் மற்றும் ஆல்பா பர்னிச்சர் ஆகிய நிறுவனங்கள் 'கோ--ஸ்பான்சர்'களாக கரம் கோர்க்கின்றன. இந்நிறுவனங்கள் அமைத்துள்ள பிரத்யேக ஸ்டால்களில், ஏராளமான சலுகைகள் கிடைக்கும்.கண்காட்சிக்கு ஒரு விசிட் அடிங்க; வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம்; வரும், 18ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. 'தினமலர்' ஷாப்பிங் திருவிழா, உங்கள் வீட்டுத் திருவிழா போல் இருக்கும்; குதுாகலமாய் 'பர்ச்சேஸ்' செய்யலாம்!








      Dinamalar
      Follow us