/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட்; ஜாலி ரோவர்ஸ் வெற்றி
/
மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட்; ஜாலி ரோவர்ஸ் வெற்றி
ADDED : ஜூன் 12, 2024 10:32 PM
கோவை : மாவட்ட அளவிலான மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ஜாலி ரோவர்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'என் தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட் கோப்பைக்கான' மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் ஜாலி ரோவர்ஸ் அணி, ரெயின்போ கே.எம்.பி., அணியை எதிர்த்து விளையாடியது.
முதலில் விளையாடிய ரெயின்போ அணியின் விவேக் பீட்டர் (56) அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் ஜாலிரோவர்ஸ் அணியின் சக்திவேல் (மூன்று விக்கெட்), நரேன் கார்த்திகேயன் (ஐந்து விக்கெட்) ஆகியோரின் பந்து வீச்சில் சரிந்தனர். இதனால் ரெயின்போ அணி 25 ஓவர்களில் 95 ரன்களுக்கு சுருண்டது.
வெற்றிக்கு 96 ரன்கள் தேவை என்ற, எளிய இலக்குடன் களமிறங்கிய ஜாலிரோவர்ஸ் அணியின் கேப்டன் காட்வின் (30*) நிதானமாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார். 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து, ஜாலி ரோவர்ஸ் வெற்றி பெற்றது.

