தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூன்றாம் டிவிஷன் லீக்ஆர்.கே.எஸ்., வெற்றி

மூன்றாம் டிவிஷன் லீக்ஆர்.கே.எஸ்., வெற்றி

மூன்றாம் டிவிஷன் லீக்ஆர்.கே.எஸ்., வெற்றி


ADDED : மே 08, 2024 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2024 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:மாவட்ட அளவிலான மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் ஆர்.கே.எஸ்., அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 'என். தாமோதரன் வெல்பேர் கோப்பைக்கான' மூன்றாம் டிவிஷன் லீக் போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது. இதில், ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் ஐ.சி.சி., மற்றும் கோவை காம்ராட்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த கோவை காம்ராட்ஸ் அணியின் ஸ்ரீராம் (50) சதம் அடிக்க, அந்த அணி 49.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்.கே.எஸ்., அணியின் ஹரிஹரன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய ஆர்.கே.எஸ்., அணியின் ஹர்ஜித் சரவணன் (60), யுவராஜ் (55*) ஆகியோர் அதிரடியாக விளையாட, ஆர்.கே.எஸ்., அணி 22.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us