/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோற்றுத்துறை நாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
சோற்றுத்துறை நாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : மே 10, 2024 11:14 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர், சோற்றுத்துறை நாதர் கோவிலில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர், சோற்றுத்துறை நாதர் கோவிலில், 12ம் ஆண்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், திருமஞ்சன அபிேஷக வழிபாடு, முளைப்பாலிகை மற்றும் சீர் தட்டம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு வேள்வி மற்றும் பொற்சுண்ணம் (மஞ்சள்) இடித்தல் நிகழ்ச்சிகள் நடந்தது.
தொடர்ந்து, வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு மற்றும் திருமுறை விண்ணப்பம் நடந்தது. அதன்பின் அன்னபூரணி தயார் மற்றும் சோற்றுத்துறை நாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மதியம், பொன் ஊஞ்சல் வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு ஊஞ்சல் ஆட்டி வழிபட்டனர்.
தொடர்ந்து அன்னம்பாலிப்பு, திருப்புகழ் பண்ணிசை நிகழ்ச்சி நடந்தது. மாலையில், கைலாய வாத்தியத்துடன் திருத்தேர் திருவீதி உலா நடந்தது.