/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : செப் 11, 2024 10:40 PM

சூலுார்: செங்கத்துறை ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
செங்கத்துறை ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 3 ம்தேதி பூச்சாட்டு மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. 9ம் தேதி விநாயகர் பொங்கல் வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சீர் வரிசைகளுடன் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, அம்மை அழைத்தலும், படைக்களம் எடுக்கும் வைபவமும் நடந்தது. அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பூவோடு, முளைப்பாரி எடுத்து வந்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தீச்சட்டி ஏந்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
இரவு, சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் விழாவில் பங்கேற்று நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று, காலை,10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா துவங்குகிறது. மாலை, மகா அபிஷேகம் மற்றும் கருப்பராயன், சக்தி பூஜை நடக்கிறது.