தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முத்துமாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

முத்துமாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

முத்துமாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்


ADDED : மே 21, 2024 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2024 12:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;கண்ணப்பநகர் முத்துமாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம், நாளை (மே 22) நடக்கிறது.

கோவை- மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள, கண்ணப்பநகர் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த மே 14 அன்று, திருக்கல்யாண உற்சவ திருவிழா துவங்கியது.

இன்று இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண வைபவத்துக்கு ஆபரணங்கள் எடுத்து வரும் நிகழ்ச்சியும், அம்மன் அழைத்தல், கரகம் அலங்கரிக்க தோட்டத்துக்கு புறப்படுதல், மே 22 காலை 5:00 மணிக்கு, சங்கனுார் கருப்பராயன் கோவிலிலிருந்து அக்னிசட்டி ஊர்வலம் மற்றும் சக்திகரகம் அழைப்பும், அம்மனுக்கு திருக்கல்யாணமும், மாலை மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் மற்றும் நள்ளிரவு கம்பம் களையும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

மே 23 காலை 9:00 மணிக்கு, மஞ்சள் நீராடுதல், மதியம் 12:00 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் விழா கமிட்டி செய்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us