ADDED : பிப் 24, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் முற்றோதல், உலக தாய்மொழி நாள் விழா மற்றும் இலக்கிய மன்ற நிறைவு விழா என, முப்பெரும் விழா நடந்தது.
தமிழ் ஆசிரியை சுவர்ணா வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரமேஷ், பள்ளியின் கல்வி இயக்குனர் குணசேகர், உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி, ஆசிரியை உஷாராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா தமிழ் துறை பேராசிரியர் அபிமன்யு விழாவில் பங்கேற்று, 'செந்தமிழ் சுவை' என்னும் தலைப்பில், நம் மொழியின் வரலாறு, சிறப்பு மற்றும் இணைய தமிழ் கருத்துக்களை இணைத்து பேசினார்.
விழாவை ஒட்டி நடந்த திருக்குறள் முற்றோதல் விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உலக தாய்மொழி நாள் உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர்.