/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில தாங் - டா போட்டி:திருவள்ளூர் அணி சாம்பியன்
/
மாநில தாங் - டா போட்டி:திருவள்ளூர் அணி சாம்பியன்
ADDED : மே 24, 2024 01:14 AM

கோவை;மாநில அளவிலான தாங் - டா போட்டியில் திருவள்ளூர் மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. கோவை இரண்டாமிடத்தை பிடித்தது.
தமிழ்நாடு தாங் - டா சங்கம், கோவை மாவட்ட தாங் - டா சங்கம் சார்பில் 8வது மாநில தாங் - டா சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் நடந்தது.
'சப் - ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கு பல்வேறு எடைப்பிரிவுகளில் நடந்த போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், சென்னை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புனபா அமா, புனபா அனிஷூபா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் சிறப்பாக வாள் வீசி, திருவள்ளூர் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
தொடர்ந்து கோவை மாவட்ட அணி இரண்டாமிடத்தை பிடித்தது. மேலும், இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவ- மாணவியர் மணிப்பூரில் நடக்கவுள்ள தேசிய தாங் - டா போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு கோவை அரசு கலைக்கல்லுாரி துணை பேராசிரியர் கனகராஜ், தமிழ்நாடு தாங் - டா சங்க பொது செயலாளர் பாண்டியன், கோவை மாவட்ட செயலாளர் சரண்ராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.