ADDED : மே 31, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: சிறுமுகை நால்ரோடு அருகே, கீழ் சபரி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், முதன்முறையாக திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
கணபதி ஹோமத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், கோவை சிவ கஸ்துாரி சுந்தரம் அம்மையார் தலைமையில், ஆரூர் தியாகராசா குழுவினர் உட்பட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறுமுகையில் முதன்முறையாக நடந்த இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதி மக்கள், சிவபக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் சங்க நிர்வாகத்தினர், சிவ பக்தர்கள் செய்திருந்தனர்.
