/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்த மாதமும் இல்லை பருப்பு ரேஷன் கார்டுதாரர்கள் வெறுப்பு; கண்டு கொள்ளாத அரசுத்துறைகள்
/
இந்த மாதமும் இல்லை பருப்பு ரேஷன் கார்டுதாரர்கள் வெறுப்பு; கண்டு கொள்ளாத அரசுத்துறைகள்
இந்த மாதமும் இல்லை பருப்பு ரேஷன் கார்டுதாரர்கள் வெறுப்பு; கண்டு கொள்ளாத அரசுத்துறைகள்
இந்த மாதமும் இல்லை பருப்பு ரேஷன் கார்டுதாரர்கள் வெறுப்பு; கண்டு கொள்ளாத அரசுத்துறைகள்
ADDED : ஆக 21, 2024 11:43 PM
பொள்ளாச்சி : ரேஷனில் இந்த மாதமும் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை என, கார்டுதாரர்கள் வெறுப்பில் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 1,540 ரேஷன் கடைகள் உள்ளன. ரேஷன் கடைகள் வாயிலாக மாதம் தோறும் அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள், கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் பருப்பு, பாமாயில் பல கார்டுதாரர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த மாதம் இதுவரை பருப்பு வழங்கப்படவில்லை என, கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ரேஷன்கடை பணியாளர்கள் கூறுகையில், 'இந்த மாதம் வழங்க வேண்டிய பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள், முந்தைய மாதமே சப்ளை செய்வது வழக்கம். ஜூலை மாதம் குறைவாகதான் பருப்பு, பாமாயில் சப்ளை செய்யப்பட்டது. இந்த மாதம் வழங்க வேண்டிய பருப்பு இன்னும் வரவில்லை. கடந்த மாதம் வாங்காதவர்களுக்கும், இந்த மாதம் கொடுக்க வேண்டி உள்ளது' என்றனர்.
இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா கூறுகையில், ''பாமாயில் பெரும்பாலான கார்டுகளுக்கு இந்த மாதம் வழங்கப்பட்டு விட்டது. இந்த மாதம் வழங்க வேண்டிய பருப்பு, இப்போதுதான் வந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் எல்லா கடைகளுக்கும் சப்ளை செய்யப்படும்'' என்றார்.
உடுமலை, ஆக. 22-
பெரியகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், சமூக விரோதிகளால் 'பார்' ஆக மாற்றப்பட்டுள்ளது; குழந்தைகளின் உடல், மனம் பாதிக்கும் இந்த அவலநிலையிலிருந்து பள்ளியை மீட்டெடுக்க, அரசுத்துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரியகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 150 மாணவர்கள் படிக்கின்றனர். உடுமலை வட்டாரத்தில், அதிக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளியாக இப்பள்ளி உள்ளது.
ஒவ்வொரு வகுப்புகளுக்கு தனி வகுப்பறைகள், தலைமையாசிரியர் அறை, சமையலறை என பள்ளியின் கட்டமைப்பும் மாணவர்களுக்கு வசதியான நிலையில் உள்ளது.
இவ்வாறு அனைத்தும் சரியாக இருப்பினும், நாள்தோறும் நிம்மதியுடன் பாடம் நடத்த முடியாத சூழலில் தான் பள்ளி உள்ளது.
விடுமுறை நாட்களில், சமூக விரோதிகள் பள்ளி கட்டமைப்புகளை சேதப்படுத்தி, சுவர்களை அசுத்தம் செய்து செல்கின்றனர்.
பள்ளியின் சத்துணவுக்கூடம் பின்புறம் இருப்பதால், சமூக விரோதிகள் அந்த கட்டடத்தை 'பார்' ஆகவே மாற்றிவிட்டனர். சனி, ஞாயிறு நாட்களில் பள்ளி வளாகத்தில் மது அருந்துவது, பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர்.
குழந்தைகள் படிக்கும் பள்ளி என்றும் பாராமல், உடைந்த பாட்டில் துண்டுகளை வகுப்பறைகளுக்கு அருகில் வீசுகின்றனர். பான்பராக் போன்ற பொருட்களை, சுவர்களில் எச்சில் துப்பி அசுத்தமாக்கியுள்ளனர்.
சில நாட்களில், விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நேரம் வரையிலும் சமூக விரோதிகள் வளாகத்தில் போதையில் அரைகுறையான ஆடைகளுடன் உறங்குகின்றனர். ஆசிரியர்கள் பலமுறை எச்சரித்தும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது.
விடுமுறைக்குப்பின், காலையில் முதலாவதாக வந்து பள்ளியை திறப்பதற்கே ஆசிரியர்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகம், கல்வித்துறை, போலீசார் என எந்த அரசு துறையும் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், பள்ளி செயல்படுவதும் குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.
பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பலமுறை புகார் அளித்தும், அரசு துறைகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அரசுப்பள்ளிகளின் மீதான நம்பிக்கையை குறைத்துவிடும்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் நடவடிக்கை எடுப்பதுடன், இவ்வாறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.