/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி எங்குமே நடக்கக் கூடாது இது
/
இனி எங்குமே நடக்கக் கூடாது இது
ADDED : ஆக 17, 2024 11:27 PM

எத்தனையோ நிகழ்வுகள், இன்னும் கண்களை விட்டு அகலாது இருக்கும். அப்படியான ஒரு துயரம், சமீபத்தில் வயநாடு மாவட்டத்தில் நடந்தது.
உலகமே உற்றுப் பார்த்த ஒரு கொடூரம். நீண்டநாள் நினைவில் இருந்து மறக்காது. பல இடங்களில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டன. இறைவனிடம் வேண்டியது, கோடானு கோடி உள்ளங்கள்.
இப்படி ஒரு வேண்டுதல், கோவையில் புலம் - தமிழ் இலக்கியப் பலகை சார்பில் நடந்த கவியரங்கிலும் எதிரொலித்தது.
கரை தாண்டி போகுது
வயநாட்டில் வெள்ள நீரு
இமை தண்டி பாயுது
இரங்கல் கண் நீரு
குறிஞ்சி நிலம் உருண்டு
முல்லை நிலம் சேறு
தென்னகத்தின் தண்ணி தொட்டி
உடைஞ்சி செந் நீரு
ஆடிப்பாடி பெருக்கெடுத்தா
ஆடிப் பெருக்காச்சி
ஆடிப்பெருக்கு வெள்ளத்துல
அத்தனையும் போச்சு
வசதிக்கு தக்கபடி
இயற்கையை மாத்தி வெச்சோம்
வருங்கால தலைமுறைக்கு
என்னத்தெ சேத்தி வச்சோம்...
- இப்படி, உருகி ஓடியது வயநாடு இரங்கற்பா.
அவிநாசி, அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் மணிவண்ணனின் இந்த இரங்கற் பா, அங்கிருந்தவர்களின் மனங்களை உருக்கியது. இனி இதுபோன்ற நிகழ்வு எங்குமே நடக்கக் கூடாது என்பது தான், அனைவரின் பிரார்த்தனையும்!

