/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை சிட்டியில் இந்த வாரம் ஆரவாரம்
/
கோவை சிட்டியில் இந்த வாரம் ஆரவாரம்
ADDED : ஆக 16, 2024 11:05 PM

ஷாப்பிங்... ஷாப்பிங்!
'தினமலர்' ஸ்மாட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும், அத்தனை தேவைகளுக்கும், தீர்வை கொடுக்கும் வகையில் பிரமாண்டமாக நடக்கும் இந்நிகழ்ச்சி, இன்றும், நாளையும் நடக்கிறது.
இடம்: கொடிசியா வர்த்தக வளாகம்,
அவிநாசி ரோடு. நேரம்: காலை 10:00 மணி முதல்.
டிஜிட்டல் உலகம்
கோவை, கோபாலபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறு, குறு நடுத்தர தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி இரண்டு நாட்கள் இன்றும், நாளையும் நடக்கிறது.
இடம்: சி.டி.எம்.எக்ஸ் கட்டடம்
நேரம்: காலை, 9:30 மணி முதல் - 5:30 மணி வரை.
தாளமும் மேளமும்
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், பாண்டி மேளம் உத்சவ், தாளமும், மேளமும் நடனமும் இணைந்த உற்சாக கொண்டாட்ட நிகழ்வு, கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், 18ம் தேதி மாலை, 6:30 மணியளவில் நடக்கிறது. 50க்கும் மேற்பட்ட கலைஞர்களின், கொம்பு, செண்டை, இலத்தாளம், குழல் ஆகியவற்றுடன் புதுமையான கம்பீர இசை நிகழ்ச்சியை காண தயாராகுங்கள்.
இடம்: மணி மேல்நிலைப்பள்ளி,
மாலை, 6:30 மணி.
நெட்வொர்க்கிங் தினம்
தொழில்முனைய பழகலாம் என, அழைக்கிறது பி.என்.ஐ., நைரா அமைப்பு. தொழில்முனைவோருக்கான நெடவொர்க்கிங் தளங்களை அமைத்துக்கொடுக்கும் வகையில், கோவை நவஇந்தியா ரேடிசன் புளூ ஹோட்டலில் வரும், 22ம் தேதி 'போகஸ் டே பார் டிரேடர்ஸ்' என்ற நிகழ்வு நடக்கிறது.
இடம்: ரேடிசன் புளூ ஹோட்டல்
காலை, 7:30 மணி.
'அண்ணக்கர்கள்'
சின்னத்திரை, பெரியத்திரைகளில் நடிப்பை பார்த்து ரசிப்பவர்களா நீங்கள்... உங்களுக்காகவே தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், தத்ரூப நடிப்பை நிகழ்த்தும் 'அண்ணக்கர்கள்' என்ற நவீன நாடக நிகழ்வு இன்று நடக்கிறது.
இடம்: வடகோவை, சமுதாயக்கூடம்
நேரம்: மாலை, 6:00 மணி.

