தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இந்த வாரம் ஆரவாரம்

இந்த வாரம் ஆரவாரம்

இந்த வாரம் ஆரவாரம்


ADDED : ஜூலை 30, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நுால் வெளியீடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில், 274 வது இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. இதில், எழுத்தாளர் பெ.மணிவண்ணன் எழுதிய ‘கரையைத் தேடும் ஓடங்கள்’ நுால் வெளியீட்டப்படுகிறது. நிகழ்ச்சிக்கு கவிஞர் பானு  தலைமை வகிக்கிறார். எழுத்தாளர் ஆனந்தன் நுாலை வெளியிட,  கவிஞர்கள் சிவசாமி, செல்வராஜ், மணிவாசகம் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர். எழுத்தாளர்கள் கரீம், பேராசிரியர் துரை முருகன், கவிஞர் காளிநாதன், ஜோதிமணி ஆகியோர் நுால் குறித்து கருத்துரை வழங்க உள்ளனர்.

இடம்: திவ்யோதயா அரங்கம்: ஆடியோ வெளியீடு கோவையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் நடிகர் சூர்யா, நடிகை மாமிதா பைஜு, இயக்குனர் வெங்கட் அட்லுாரி மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது.

இடம்: ஹிந்துஸ்தான் கலைக் கல்லூரி  அரங்கம்தேதி: ஆக.: விளையாட்டு விழா: எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு ஸ்கூல், 17வது விளையாட்டு தின விழா நடக்கிறது. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக, 17-வது விளையாட்டு தின விழாவில் பங்கேற்க பெற்றோர்களை அழைக்கின்றனர். சிறப்பு விருந்தினராக, முன்னாள் இந்திய டேபிள் டென்னிஸ் சாம்பியன் பத்மஸ்ரீ சரத் கமல் பங்கேற்கிறார். டாக்டர் மணிமேகலை மோகன் முன்னிலை வகிக்கிறார்.

இடம்: எஸ்.எஸ்.வி.எம்.: மரக்கன்று நடும் விழா பள்ளி வளாகத்தை ஒரு பசுமை வளாகமாக மாற்றி,  மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்தில் மதுமிதா மற்றும் கார்த்திக் மேத்தா சார்பில், சிறப்பு மரக்கன்று நடும் விழா நடக்கிறது.  இந்த முயற்சி சுற்றுச்சூழலுக்கும்,  மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

இடம்: தொண்டாமுத்துார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us