ADDED : பிப் 27, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கோவை வரு கையை கண்டித்து, கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில், பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வந்துள்ளார். அமித்ஷாவின் வருகையை கண்டித்து, கோவையில் உள்ள இ.கம்யூ., தி.க., வி.சி., பெ.தி.க., உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள், பீளமேடு இன்ஜி., கல்லூரி அருகில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.