/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இந்தியா ஒழிக' எழுதியவர்களை கைது செய்ய வேண்டும்
/
'இந்தியா ஒழிக' எழுதியவர்களை கைது செய்ய வேண்டும்
ADDED : ஜூலை 11, 2024 11:22 PM
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவை கோட்ட செயலாளர்கள் ராஜ்குமார், உருவை பாலன் ஆகியோர் தலைமை தாங்கினர். கோவை வடக்கு மாவட்ட தலைவர் சிவப்புகழ் முன்னிலை வகித்தார். தென்பாரத அமைப்பாளர் பக்தன், மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் ஆகியோர் பேசினர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மேட்டுப்பாளையத்தில் வரும் 21ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 2500 பேர் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில், சுவற்றில் 'இந்தியா ஒழிக' என எழுதிய தேச விரோத பிரிவினைவாத சக்திகளை, போலீசார் உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில் விவசாய தேவைக்கு, தங்களது சொந்த நிலத்தில் மண் எடுக்கும் விவசாயிகளின் வாகனங்களை மறித்து, அத்துமீறி வசூல் செய்யும் நபர்கள் மீது உடனடியாக வருவாய் துறை மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில் மாவட்ட துணை தலைவர் தங்கவேல் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மேட்டுப்பாளையம் மையமாக செயல்படும் 10 ஒன்றியங்களில் உள்ள ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.-