/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எண்ணங்களே பிரபஞ்சத்தை இயக்குகிறது'
/
'எண்ணங்களே பிரபஞ்சத்தை இயக்குகிறது'
ADDED : செப் 09, 2024 08:15 AM

அன்னுார்: 'எண்ணங்களே பிரபஞ்சத்தை இயக்குகிறது,' என, பிரபஞ்சானந்த சுவாமிகள் அன்னுாரில் பேசினார்.
அன்னுார் வள்ளலார் ராமலிங்க சுவாமி அடியார்கள் மற்றும் கோவில் அறங்காவலர்கள் சார்பில், கூட்டு பிரார்த்தனை மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது.
இதில், பிரபஞ்சானந்த தெய்வசிகாமணி சுவாமிகள் பேசுகையில், ''எண்ணங்களே இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறது. நாம் நல்ல எண்ணங்களை பரவச் செய்ய வேண்டும். மானுடம் மாண்புற பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். உலக மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்கின்ற சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
மனித குலம் கடைத்தேறுவதற்கு ஆன்மிகமே சிறந்த வழி. போர்களற்ற சமுதாயம் பூக்கவும், சமாதானமும், அமைதியும் நிலவவும் தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர்கள் மணி, யசோதா, முன்னாள் பேரூராட்சி தலைவர் சவுந்தரராஜன், விழா ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.