/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது
/
டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது
ADDED : ஆக 12, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்;குனியமுத்தூர் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர், 26; டிரைவர். நேற்று முன்தினம் பி.கே.புதூர், சோப்பு கம்பெனி சாலையில் நடந்து சென்றார். அவ்வழியே வந்த மூவர் இவரை வழிமறித்து, கஞ்சா கேட்டுள்ளனர்.
இவர் இல்லையென கூறியதும், பீர் பாட்டிலை உடைத்து காட்டி, பணம் தருமாறு மிரட்டினர். ஸ்ரீதர் மறுத்தபோது அவரது சட்டை பாக்கெட்டிலிருந்த 500 ரூபாயை பறித்து தப்பினர். ஸ்ரீதர் புகாரில் குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, சுகுணாபுரம் கிழக்கு, சக்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த முஹமது அலி, 47 மற்றும், 17 வயதான இரு சிறுவர்களை கைது செய்தனர்.

