தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பணம் தர மறுத்ததால் கத்தி குத்து மூவர் கைது; ஒருவருக்கு வலை

பணம் தர மறுத்ததால் கத்தி குத்து மூவர் கைது; ஒருவருக்கு வலை

பணம் தர மறுத்ததால் கத்தி குத்து மூவர் கைது; ஒருவருக்கு வலை


ADDED : ஆக 19, 2024 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2024 10:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:கோவை, உப்பிலிபாளையம் அருகே பணம் தரமறுத்த வாலிபருக்கு, கத்திக்குத்து விழுந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கிய மூவரை கைது செய்த போலீசார், ஒருவரை தேடுகின்றனர்.

சிங்காநல்லுார்-ஹோப்ஸ் ரோட்டில் உள்ள ராமானுஜம் நகர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் அஜய்குமார்,24. இவர் உப்பிலிபாளையம், இந்திரா கார்டன் அருகே மீன் வறுவல் வாங்க கடந்த, 16ம் தேதி இரவு, 9:20 மணிக்கு சென்றார்.

அங்கு, சூர்யா(எ)மின்னல் சூர்யா, உப்பிலிபாளையம், கம்பன் நகரை சேர்ந்த கிருத்திக் பாலாஜி,19, மசக்காளிபாளையத்தை சேர்ந்த, 18 வயது மதிக்கத்தக்க சிறுவன், நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த, 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆகியோர் நின்றிருந்தனர்.

இவர்கள் நான்கு பேரும், அஜய்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தரமறுத்தவரின் தலையில் சூர்யா மது பாட்டிலால் தாக்க, பின்தொடர்ந்து, தலை மற்றும் இடதுபுற தோள்பட்டையில் கிருத்திக் பாலாஜி, கத்தியால் கிழித்துள்ளார்.

அஜய்குமார் இவர்களை தடுக்க முயன்றபோது, இடதுபுற தோள் பட்டையில் கிருத்திக் பாலாஜி மீண்டும் கத்தியால் குத்த பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.

மற்ற இரு சிறுவர்களும் அஜய்குமாரை பிடித்துக்கொள்ள, அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.5,000ஐ பறித்து நான்கு பேரும் தப்பினர்.

காயமடைந்த அஜய்குமார், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, சூர்யாவை தவிர மற்ற மூன்று பேரையும் கைது செய்தனர். தலைமறைவான சூர்யாவை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us