/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிபோதையில் ரகளை; ரவுடிகள் மூவர் கைது
/
குடிபோதையில் ரகளை; ரவுடிகள் மூவர் கைது
ADDED : ஜூன் 27, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : உக்கடம் போலீசார் டவுன்ஹால் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த மூவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், பணி செய்ய விடாது தடுத்து மிரட்டலும் விடுத்துள்ளனர். விசாரணையில் அவர்கள் தெலுங்குபாளையத்தை சேர்ந்த ரஞ்சித் குரு,29, செல்வபுரம், எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த அனிஸ்குமார்,42, காந்திபுரம் அருகே ராம் நகரை சேர்ந்த ஜெய்கணேஷ்,45 என்பதும், இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ரவுடிகள் மூவரையும் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.