/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்து பவுன், பணம் கொள்ளை பெண் உட்பட மூவருக்கு சிறை
/
ஐந்து பவுன், பணம் கொள்ளை பெண் உட்பட மூவருக்கு சிறை
ஐந்து பவுன், பணம் கொள்ளை பெண் உட்பட மூவருக்கு சிறை
ஐந்து பவுன், பணம் கொள்ளை பெண் உட்பட மூவருக்கு சிறை
ADDED : மார் 11, 2025 04:14 AM

கோவை : வீட்டின் கதவை உடைத்து, ரூ.1 லட்சம் மற்றும் ஐந்தே முக்கால் பவுன் நகைகளை கொள்ளையடித்த இருவரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் நெகமத்தை சேர்ந்தவர் பிச்சையம்மாள், 40. கடந்த, 3 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஐந்தே முக்கால் பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பிச்சையம்மாள் அளித்த புகாரின் பேரில், நெகமம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். விசாரணையில், கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த மதன்குமார், 27, கோவில்மேட்டை சேர்ந்த சத்தியசீலன், 24 ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. கொள்ளையடித்த நகைகளை சத்தியசீலனின் தாயார் அன்னக்கொடி, 43 அடகு வைத்திருந்ததும் தெரிந்தது.
மதன்குமார், சத்தியசீலன், அன்னக்கொடி ஆகிய மூவரையும் தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.