/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் மரணம்
/
நீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் மரணம்
ADDED : ஏப் 24, 2024 10:08 PM

கோவை:கோவை மாவட்டம், பச்சாபாளையத்தை சேர்ந்த நண்பர்கள் பிரவீன்,17, கவின்,16, தக்ஷன்,17, சஞ்சய்,21. இவர்களில், பிரவீன் மற்றும் தக்ஷன் ஆகியோர் தீத்திபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். கவின் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்புடன், கல்வியை நிறுத்தி விட்டார். நண்பர்கள் நான்கு பேரும், இருட்டுபள்ளம் அடுத்த பெருமாள்கோவில்பதியில் உள்ள தடுப்பணையில், நேற்று மாலை குளிக்க சென்றனர்.
சஞ்சய் மட்டும் நீரில் இறங்கி விட்டு மேலே வந்த நிலையில், மற்ற மூவரும் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர்.
மூவருக்கும் நீச்சல் தெரியாததால் மூழ்கினர். இதை கண்ட சஞ்சய் கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, பிரவீன், கவின், தக்ஷன் ஆகியோரை மீட்டனர். அதற்குள் மூவரும் இறந்து விட்டனர்.
தகவல் அறிந்து வந்த காருண்யா நகர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

