பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையே த்ரோபால் போட்டி
பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையே த்ரோபால் போட்டி
ADDED : செப் 13, 2024 10:26 PM

பொள்ளாச்சி : கோவை மண்டல பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான, த்ரோபால் போட்டியில் மாணவர்கள் திறமை காண்பித்து அசத்தினர்.
கோவை மண்டல பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான, 'த்ரோபால்' போட்டி, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. அதில், கோவை மண்டலத்தை சேர்ந்த, ஏழு கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு அணி வீரர்களும், தங்களது அணியை வெற்றி பெற வைக்க ஆக்ரோஷமாகவும், விவேகமாகவும் விளையாடிய விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
முதல் அரையிறுதி போட்டியில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணியும், பி.ஏ., கல்லுாரி அணியும் மோதின. அதில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 15 - 13, 15 - 12 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில், கோவை கிருஷ்ணா கல்லுாரி அணியும், ராமகிருஷ்ணா கல்லுாரி அணியும் மோதின. கோவை கிருஷ்ணா கல்லுாரி அணி, 15 - 5, 15 -4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, இறுதி போட்டிகள் இன்று நடக்கிறது.
