தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இடியுடன் மழை பொழிவு சுற்றுலா பயணியர் உற்சாகம்

இடியுடன் மழை பொழிவு சுற்றுலா பயணியர் உற்சாகம்

இடியுடன் மழை பொழிவு சுற்றுலா பயணியர் உற்சாகம்


ADDED : ஏப் 29, 2026 05:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை ஏப்.30–: வால்பாறையில் இடியுடன் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையினால் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த ஐந்து மாதங்களாக வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்து, வெயில் நிலவியதால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் வறண்டன. சில எஸ்டேட்களில் குடிநீர் தட்டுப்பாட்டினால் தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில், வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் இடியுடன் மழை பெய்கிறது. இதனால், எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில்  ஈடுபட முடியாமல் தவித்தனர்.

நீண்ட இடைவெளிக்கு பின், வால்பாறையை குளிர்விக்கும் வகையில் பெய்யும் மழையினால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்தனர்.

நேற்று காலை, 8:00 மணி வரை சோலையாறு – 32 மி.மீ., மேல்நீராறு–19 மி.மீ., கீழ்நீராறு–17 மி.மீ., என்ற அளவில் மழையளவு பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us