/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
த.மு.எ.ச., நடத்துகிறது கலை இரவு நிகழ்ச்சி
/
த.மு.எ.ச., நடத்துகிறது கலை இரவு நிகழ்ச்சி
ADDED : பிப் 21, 2025 11:15 PM
அன்னூர்; அன்னூரில் இன்றும், நாளையும், (22, 23) மக்கள் ஒற்றுமை கலை இரவு நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று (22ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, புதுகை பூபாளம் கலைக்குழுவின், நையாண்டி தர்பார் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து சேலம் தமிழ் தர்ஷனா வின் இரட்டை அம்மன் நடனமும், மதுரை நாராயணனின் மரக்கால் ஆட்டமும், கரூர் துர்காவின் மாறுபட்ட நடனங்களும் இரவு 11:00 மணி வரை நடைபெறுகிறது.
வரும் 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு, விழுப்புரம் மல்லன் பயிற்சி மையத்தின், மல்லர் கம்பம் வீரகலை நிகழ்ச்சியும், இதையடுத்து மதுரை விஜய தர்சினியின் சிலம்பாட்டமும், நிமிர்வுகள் கலைக்குழுவின் பறையாட்டமும், கர்நாடக மலைவாழ் மக்களின் 'டொல்லு குனித்தா' கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
கவிஞர் லட்சுமி காந்தன் பேசுகிறார். ஏற்பாடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் ஏற்பாடு செய்து வருகின்றன.