/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; மாவட்டத்தில் 1,425 பேர் எழுதினர்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; மாவட்டத்தில் 1,425 பேர் எழுதினர்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; மாவட்டத்தில் 1,425 பேர் எழுதினர்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; மாவட்டத்தில் 1,425 பேர் எழுதினர்
ADDED : பிப் 24, 2025 12:49 AM
கோவை; மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வை 1,425 பேர் எழுதினர்.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் 2'ஏ' பணியில் காலியாக உள்ள, 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த, ஜூனில் வெளியிடப்பட்டது.
குரூப், 2 தேர்வு வாயிலாக தமிழக அரசின் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணைப் பதிவாளர், கிரேடு 2, நகராட்சி ஆணையர், கிரேடு- 2, உதவிப் பிரிவு அதிகாரி, கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கான முதல்நிலைத் தேர்வு, செப்., 14ம் தேதி நடந்தது. மாநிலம் முழுவதும், 5.81 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், டிச., 12ல் வெளியிடப்பட்டது.
கடந்த 8 ம் தேதி குரூப் 2 'ஏ' பதவியில், 2006 பணியிடங்களுக்கான பிரதான தேர்வு நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று குரூப், 2 பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. காலை 9:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை நடந்தது. மாவட்டத்தில் ஏழு மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வுக்கு, 1,690 பேர் தகுதி பெற்றனர்.
நேற்று நடந்த தேர்வை, 1,425 எழுதினர்; 265 பேர் தேர்வு எழுதவில்லை. மாவட்டத்தில் 84.32 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

