/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் இன்று 93 சிலைகள் பிரதிஷ்டை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

ADDED : செப் 07, 2024 02:46 AM
அன்னூர்;அன்னூர் வட்டாரத்தில், 93 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
அன்னூர் வட்டாரத்தில், ஹிந்து முன்னணி சார்பில், இன்று அன்னூர், மூக்கனூர், கரியாக் கவுண்டனூர், காட்டம்பட்டி, குன்னத்தூர், பொன்னே கவுண்டன் புதூர் உள்ளிட்ட 45 இடங்களில் ஹிந்து முன்னணி சார்பில் இன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. கணபதி ஹோமம், கோ மாதா பூஜை, திருவிளக்கு வழிபாடு, ஆன்மீக சொற்பொழிவு என பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வரும் 9ம் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிறுமுகை அருகே பவானி ஆற்றில் கரைக்கப்படுகிறது. இத்துடன் சொக்கம்பாளையம், அன்னூர், கணேசபுரம், மேகிணறு உள்ளிட்ட ஊர்களில் உள்ள விநாயகர் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் கோவில்பாளையம், கோட்டைப்பாளையம், வெள்ளானைப்பட்டி, அத்திப்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் ஹிந்து முன்னணி சார்பில் 28, இந்து மக்கள் கட்சி சார்பில் மூன்று, பொதுமக்கள் சார்பில் 17 என 48 விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.