/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வினை தீர்க்கும் விநாயகருக்கு இன்று விழா!
/
வினை தீர்க்கும் விநாயகருக்கு இன்று விழா!
ADDED : செப் 07, 2024 01:59 AM
கோவை;விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கோவையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் வித விதமாக சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த முறை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதை தவிர, பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் களிமண் பயன்படுத்தியும், விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றோடு பசு மாட்டுச்சாணத்தில், வைக்கோல், புண்ணாக்கு உள்ளிட்ட ஒரு சில இயற்கை பொருட்களை சேர்த்தும், கைவினைக்கலைஞர்கள் விநாயகரை உருவாக்கியுள்ளனர்.
நிறைவாக விசர்ஜனம் செய்யும் போது, அது இயற்கை உரமாக மாறிப்போகும். அதனால் மாசு ஏற்படாது.
இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி, விஷ்வஹிந்துபரிஷத், விஷ்வஹிந்துபரிஷத் தமிழகம், அகில பாரத அனுமன்சேனா, விவேகானந்தர் பேரவை, பாரத்சேனா, சக்திசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், சுமார் 3,000 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
இன்று காலை விநாயகர் சிலை பிரதிஷ்டைக்குப்பின், விநாயகர் அகவல் பாராயணம், நாமசங்கீர்த்தனம், இசைநிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
கோவையிலுள்ள அனைத்து கோவில்களிலும், விநாயகர் சிலைகள் இன்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
மோதகம், கொழுக்கட்டை. சுண்டல், அப்பம் படைக்கப்படுகின்றன. ஈச்சனாரி, புலியகுளம் முந்திவிநாயகர், ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர் கோவில்களில், இன்று சிறப்பு வழிபாடு அதிகாலை 6:00 மணிக்கு நடக்கிறது.