/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய நிகழ்ச்சி தொடர்ச்சி
/
மாநகரில் இன்றைய நிகழ்ச்சி தொடர்ச்சி
ADDED : ஆக 23, 2024 08:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண் சமத்துவம்
நிர்மலா மகளிர் கல்லூரியில், 'அவளின் உரிமை, குரல், ஆற்றல்' என்ற தலைப்பில், பெண்கள் சமத்துவம், பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த, சர்வதேச கருத்தரங்கு நடக்கிறது. கல்லூரி வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கும் கருத்தரங்கில், பெண் ஆளுமைகள் பலர் பேசுகின்றனர்.
பெண் தொழில்முனைவோர் மேம்பாடு
நேர்டு தொண்டு நிறுவனம் சார்பில், பெண் தொழில் முனைவோரின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சியின் கீழ், திறன் மேம்பாடு கட்டமைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வடவள்ளி, நேர்டு தொண்டு நிறுவனத்தில், காலை 11:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.