ADDED : ஆக 22, 2024 11:56 PM

கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள்
இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரியின், இ.சி.இ., துறை சார்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு இன்று துவங்கவுள்ளது. இதில், ரேடியேசன் தொழில்நுட்பம் அதன் சவால்கள், வாய்ப்புகள் குறித்து வல்லுநர்கள் விளக்கமளிக்கவுள்ளனர். காலை, 9:30 மணிக்கு நிகழ்வுகள் துவங்கவுள்ளன.
புத்தக திருவிழா
தொழில்நுட்பங்கள் ஆயிரம் வரினும், வாசிப்பை நேசிப்பவர்களுக்கு என்றுமே வானம் வசப்படும். வாசிப்பை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மேட்டுப்பாளையம் 4வது புத்தகத்திருவிழா இன்று துவங்குகிறது. இ.எம்.எஸ்., திருமண மண்டபத்தில், காலை, 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. இத்திருவிழா, வரும் செப்., 1 வரை நடப்பதால், அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
திருகல்யாண வைபவம்
தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று திருகல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. மாலை, 6:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, 7:00 மணிக்கு திருகல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. இரவு, 8:30 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.
நன்னீராட்டு பெருவிழா
காரமடை பெள்ளாதி கிராமம் சங்கமேஸ்வரர் திருகோவில் நன்னீராட்டு பெருவிழா இன்று, காலை, 9:15 மணி முதல் 9:45 மணி முதல் நடைபெறவுள்ளது.
குன்னத்துார் ஸ்ரீ பழனிஆண்டவர் திருக்குட நன்னீராட்டு பெருவிழா, இன்று காலை, 6:00 -7:30 மணிக்குள் நடைபெறுகிறது. காலை, 10:00 மணியளவில், சண்முகம் குழுவினரின் பஜனை நடக்கவுள்ளது.
தேசிய கருத்தரங்கு
இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரியில், ஏ.ஐ., தொழில்நுட்ப பயன்பாட்டில், வேளாண் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான கருத்தரங்கு இன்று நடக்கிறது. கருத்தரங்கு, காலை, 11:00 மணி முதல் 12:30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில், வெளிநாட்டு கல்விநிறுவனங்களுடன் இணைந்து, பன்னாட்டு கருத்தரங்கை நடத்துகிறது. இக்கருத்தரங்கு, காலை, 10:00 மணியளவில் கல்லுாரி அரங்கில் துவங்குகிறது.