தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மே 06, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மஞ்சள் நீர் விழா

எருக்கம்பெனி ஜீவா நகர், ஸ்ரீபுற்றுக்கண் நாகமுத்து மாரியம்மன் கோயில் திருக்கல்யாண திருவிழா, காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீர் விழா.

உற்சவத்திருவிழா கோட்டை ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவிலில் காலை, 11:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை பூஜை, 12:00 மணிக்கு மறுபூஜை.

குண்டம் திருவிழா ராம் நகர் கோகலே வீதி, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை, மாலை 6:00 மணி.

ராம் நகர் விவேகானந்தர் ரோடு, வி.என். தோட்டம், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், காலை சிம்ம வாகன புறப்பாடு, திருக்கரகம் அழைத்தல் மாலை பொங்கல், மாவிளக்கு பூஜை.

சித்திரை பெருவிழா காட்டூர், காளப்பன் லே–அவுட் ஸ்ரீ அம்பிகை மாரியம்மன் கோயில், 50ம் ஆண்டு சித்திரை பெருவிழா, மஞ்சள் நீராடல் மாலை 7:00 மணி.

வீரகேரளம், ஸ்ரீ அரசமரத்து விநாயகர், ஸ்ரீ சிங்காரவேலர், ஸ்ரீ முனியப்பன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில்  சிறப்பு பூஜை காலை 6:00 மணி முதல்.

மண்டல பூஜை சிங்காநல்லுார் அடுத்த கள்ளிமடை கருப்பராயன் கோயிலில் விநாயகர், கன்னிமார், முனியப்பன் சுவாமி, குதிரை வாகனத்தில் கருப்பராயன், பைரவர் சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, காலை 8:00 மணி. மாலை 6:00 மணி முதல் மண்டல பூஜை.

சிறப்பு பூஜை திருச்சி ரோடு, போட் ஹவுஸ் அருகே பிளேக் மாரியம்மன் கோயில், காலை 6:00 மணி முதல்.

சிங்காநல்லுார் அடுத்த கள்ளிமடை ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், காலை 6:00 மணி முதல்.

சிங்காநல்லுார் அடுத்த கள்ளிமடை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில், காலை 6:00 மணி முதல்.

ஒண்டிப்புதுார் காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம் கோயிலில் முப்பெரும் தேவியர், அங்காள பரமேஸ்வரி அம்மன், சிவபெருமான், முருகன், விநாயகர், பாரத மாதா உள்ளிட்ட தெய்வங்களுக்கு காலை 6:00 மணி முதல் சிறப்பு பூஜை.

சிங்காநல்லுார் செல்லாண்டியம்மன் கோயிலில் காலை 6:00 மணி முதல் சிறப்பு பூஜை.

ஆன்மிக சொற்பொழிவு அர்ஷ வித்யா குருகுலம் மற்றும் பாரதீய வித்யா பவன் வழங்கும் ‘உத்தவ கீதா–பாகம் 9’ ஆன்மிக சொற்பொழிவு: ஆர்.எஸ். புரம், டி.பி. ரோடு, பாரதீய வித்யா பவன் அரங்கம், மாலை 6:30 மணி.

பொது

மாணவர் சேர்க்கை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிக்கான மாணவர் சேர்க்கை. காலை 7:00 மணி முதல். இடம்: கோவை நேரு ஸ்டேடியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us