/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றையசிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றையசிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 17, 2024 12:14 AM

கம்பத்து ஆட்டம்
கம்பத்தாட்டம் சமீபகாலமாக கிராமங்களில் பிரபலமாகி வருகிறது. இளைஞர்கள், ஜீன்ஸ் பேன்ட்ஸ், வெள்ளை சட்டை, கால்களில் சலங்கை, தலையில் துண்டு அணிந்து தாளத்திற்கு ஏற்ப அசைந்து ஆடுவார்கள். கோவில் நிகழ்வுகளில் கட்டாயம் இடம் பெறுகிறது.
அதன்படி, இடுகம்பாளையம் அனுமந்தராயசாமி கோவிலில், ஆவணி மாத சனிக்கிழமை விழா இன்று துவங்குகிறது. காலை, 9:45 முதல் 12:45 மணி வரை சங்கம் கலைக்குழுவினரின், பஜனை மற்றும் கம்பத்து ஆட்டம் கலை நிகழ்வு நடைபெறுகிறது. 12:00 மணிக்கு அன்னதான நிகழ்வு நடைபெறும்.
அரங்கேற்ற வேளை
சுந்தராபுரம் பாதாள கண்டியம்மன் கோவிலில், கிராமிய கும்மி அரங்கேற்ற விழா மாலை 5:00 மணியளவில் நடைபெறவுள்ளது. மதுக்கரை பாலமுருகன் கலைக்குழு, சுந்தராபுரம் பாதாள கண்டியம்மன் மகளிர் கலை குழு பெண்கள், இதில் பங்கேற்கவுள்ளனர்.
இலக்கிய அரங்கம்
கோவை மாவட்ட மைய நுாலகம் மற்றும் செம்மொழி மன்றம் சார்பில், இலக்கிய அரங்கம் கவுலி பிரவுன் சாலையில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் காலை, 10:00 மணியளவில் நடக்கிறது. செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கருப்பொருளில், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
விளையாட்டு போட்டிகள்
புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடர் போட்டிகள், கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில், காலை, 9:30 மணியளவில் நடக்கிறது.
மதுக்கரை குறுமைய விளையாட்டு போட்டிகள் காலை, 9:00 மணிக்கு காளியாபுரம் நேரு டெக் கல்லுாரியில் நடக்கிறது.

