/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மார் 01, 2025 05:55 AM

ராகவேந்திரா சுவாமி பட்டாபிஷேக தினம்
கோவைப்புதுார், ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடத்தில், 430வது ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் பட்டாபிஷேக நாள் நடக்கிறது. காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை, விசேஷ பாலபிஷேகம், தீபாராதனை, புண்யாகவாசனம், கலசஸ்தாபனம், அக்னி பிரதிஷ்டை, சுதர்சன ஹோமம், ராகவேந்திர அஷ்டாக்சர மந்திர ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடக்கிறது.
திருத்தேர்த் திருவிழா
பெரியகடை வீதி, கோனியம்மன் கோவிலில், திருத்தேர்த் திருவிழா கடந்த பிப்., 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. காலை, அபிஷேகம், ஆராதனைகளை தொடர்ந்து, மாலை, 6:00 மணி முதல், அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிது.
நாமசங்கீர்த்தனம்
ராம்நகர், கோதண்டராமர் கோவிலில், விசேஷ பூஜைகள், ஹோமங்கள், சொற்பொழிவு மற்றும் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள் கடந்த ஜன.,31ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அரசு கலைக் கல்லுாரியில், 1970ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் மீண்டும் கல்லுாரியில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். பழைய நினைவுகளை பகிர்தல், குழுப்புகைப்படம் எடுத்தல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் காலை, 11:00 மணி முதல் நடக்கிறது.
கைத்தறி கண்காட்சி, விற்பனை
ஆர்.எஸ்.புரம், ஆரோக்கியசாமி தெரு, சாஸ்திரி மைதானத்தில், 'காட்டன் பேப்' எனும் பெயரில், கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 120 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. காலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை பார்வையிடலாம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.