/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மார் 08, 2025 11:39 PM

திருத்தேர்ப் பெருவிழா
மேட்டுப்பாளையம், காரமடை, அரங்கநாதசுவாமி கோவிலில், மாசிமகத் திருத்தேர்ப் பெருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று, இரவு, 8:30 மணிக்கு, கருடசேவை நடக்கிறது.
கும்பாபிஷேக விழா
சரவணம்பட்டி, கரட்டுமேடு, மருதாசலக்கடவுள் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. காலை, 4:00 மணி முதல், பல்வேறு பூஜைகள் மற்றும் ஆறாம்கால வேள்வி நடக்கிறது. அதிகாலை, 5:30 முதல் காலை, 8:15 மணி வரை கும்பாபிஷே விழா நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு, 7:00 மணிக்கு, திருவீதி உலா நடக்கிறது.
தேர்த்திருவிழா
மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வவிநாயகர், கன்னிமார் கோவிலில், 16ம் ஆண்டு தேர்த்திருவிழா நடந்து வருகிறது. தினமும் பல்வேறு பூஜைகள் நடந்து வரும் நிலையில், இன்று இரவு, 8:00 மணிக்கு கன்னிமார் பூஜை நடக்கிறது.
ஆன்மிக ஐயம் தெளிதல்
மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத் வேதாந்த குருகுலம் சார்பில், வாராந்திர சத்சங்கம் நடக்கிறது. இன்று, மாலை, 5:30 முதல் இரவு, 7:00 மணி வரை, 'அறிவியல் ஆன்மிக ஐயம் தெளிதல்' என்ற தலைப்பில், சிறப்புரை நடக்கிறது.
காலபைரவர் பிரதிஷ்டை
ராமநாதபுரம், கோத்தாரி லே-அவுட், சடையாண்டி அப்பர் ஞானவாராகி அம்மன் கோவிலில், ஒரே கல்லில் ஆன எட்டடி உயரம் கொண்ட கால பைரவர் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. காலை, 8:45 மணிக்கு மேல், 10:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
கைவல்ய நவநீதம்
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில், 'கைவல்ய நவநீதம்' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடக்கிறது. டாடாபாத், மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷனில், மாலை, 5:00 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது.
சங்கீத உபன்யாசம்
ராம்நகர், கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், சங்கீத உபன்யாசம் இன்று மாலை, 6:15 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது. சொற்பொழிவாளர் சீர்காழி சட்டநாத பாகவதர், 'போலகம் ஸ்ரீ விஜய் கோபால யதீந்திராள்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
புத்தகம் வெளியீடு
டில்லி, டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், 'பவர் வித்இன் பிரதமர் மோடியில் தலைமைத்துவ பண்பு' குறித்து நுால் வெளியிடப்படுகிறது. ராமநாதபுரம், ஆர்ய வைத்ய பார்மசியில், காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
கோவைப்புதுார், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, 14வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லுாரி இயக்குனர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார்.
அந்தர் யோகம்
பெரியநாயக்கன்பாளையம், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம், வித்யாலயா கோவிலில், அந்தர்யோகம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை, பஜனை, தியானம், சொற்பொழிவு, அர்ச்சனை, நாமாவளி, ஆரத்தி ஆகியவை நடக்கிறது.
சமஸ்கிருத வகுப்புகள்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 மணி முதல் மதியம், 1:15 மணி வரை நடக்கும் வகுப்பில், சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.
ரத்ததான முகாம்
ஜீவஜோதி, ஸ்ரீ சபரி அன்னதான சேவா, டிங்கிள் சேவா அறக்கட்டளைகள், அப்துல்கலாம் நற்பணி மன்றம் கோயம்புத்துார் லைப் சேவர் குழு, பாரதிய மஸ்துார் சங்கம், விவேகானந்தர் ரத்த வங்கி ஆகியவை இணைந்து ரத்ததான முகாமை நடத்துகின்றன. கணபதி, பி.எம்.எஸ்., ஹாலில், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.
கைத்தறி கண்காட்சி, விற்பனை
ஆர்.எஸ்.புரம், ஆரோக்கியசாமி தெரு, சாஸ்திரி மைதானத்தில், 'காட்டன் பேப்' எனும் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள், நெசவாளர்களின் 120 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. காலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை பார்வையிடலாம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி ரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.