/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மார் 15, 2025 12:09 AM

கும்பாபிஷேக விழா
இடையர்பாளையம், குனியமுத்துார், யோக விநாயகர் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 8:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, முதற்கால யாகசாலை பூஜைகள், தீர்த்தக்குடங்கள் அழைத்து வருதல், அஷ்டபந்தன சாத்துதல், இரண்டாம் யாகசாலை பூஜைகள் ஆகியவை நடக்கிறது.
சந்தான சேவை
மேட்டுப்பாளையம், காரமடை, அரங்கநாதசுவாமி கோவிலில், மாசிமகத் திருத்தேர் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல், கடந்த மார்ச் 12ம் தேதி நடந்தது. விழாவில், இன்று, மாலை, 6:00 மணிக்கு, சந்தான சேவை நடக்கிறது.
தன்வந்திரி தேவதா பிரதிஷ்டை
சவுரிபாளையம், ராஜ கணபதி விநாயகர் கோவிலில், ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி தேவதா பிரதிஷ்டை, மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 9:15 முதல் 10:15 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடக்கிறது.
புதுமை போட்டிகள்
ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், இயந்திர பொறியியல் துறை சார்பில், புதுமை போட்டிகள் நடக்கிறது. 'சூரிய சக்தி வாகனம் மற்றும் மின்சார கார்டிங் சாம்பியன்சிப்' போட்டியில் பல்வேறு கல்லுாரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
ஆசிரியர்- தொழிற்துறை இணைப்பு
கருமத்தம்பட்டி, ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ் சார்பில், ஆசிரியர் - அகாடமி மற்றும் தொழிற்துறை இணைப்பு திட்டம் நடக்கிறது. பேராசிரியர்கள் ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்வையிட உள்ளனர்.
பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு
திருமலையம்பாளையம், நேரு கலை அறிவியல் கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில் காலை, 9:30 மணி முதல் நடக்கும் கூட்டத்திற்கு நேரு கல்வி குழுமத்தின் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகிக்கிறார்.
போதையில்லா தமிழகம்
கருமத்தம்பட்டி, ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் 'போதையில்லா தமிழகம்' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கை நடத்துகின்றன. நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் போதை எதிர்ப்பு மையம் இணைந்து, மாலை, 3:00 மணிக்கு கருத்தரங்கை நடத்துகின்றன.
நுகர்வோர் உரிமைகள் தினம்
இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில், உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அவிநாசி ரோடு, மண்டல அறிவியல் மையத்தில், காலை, 10:30 மணி முதல் நிகழ்ச்சி நடக்கிறது.
கலாச்சாரத் திருவிழா
அரசூர், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் சர்வதேச தொழில்நுட்ப கலாசாரத் திருவிழா நடக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் சாராத போட்டிகள், வல்லுனர்களின் பயிற்சி பட்டறைகள் நடக்கிறது. உணவு, கைவினைப் பொருட்கள், ஆடை, முக ஓவிய அரங்குகள் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.