/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஏப் 27, 2024 12:56 AM

பெருந்திருவிழா
அவிநாசி ரோடு, தண்டுமாரியம்மன் கோவிலில், சித்திரைப் பெருந்திருவிழா நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, கணநாதர் பொம்மை நாடக சபாவின் கிராமிய பொம்மலாட்டம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, சிறப்புப் பட்டிமன்றம் நடக்கிறது.
'கட உபநிஷத்' சொற்பொழிவு
'இறைவனும், உயிரும் வேறில்லை', 'சுய அறிவை தேடுங்கள், அதுவே மிக உயர்ந்த பேரின்பம்' போன்ற பல தத்துவங்களை கட உபநிஷத் விளக்குகிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதியில், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷனில், 'கட உபநிஷத் ' சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.
சித்திரைத் திருவிழா
குனியமுத்துார், அறம்வளர்த்த அம்மன் கோவிலில், சித்திரைத் திருவிழா, கடந்த 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று, மாலை, 6:00 மணிக்கு, சத்தியமங்கலம், 7 சிட்டி பாய்ஸ் குழுவினர் வழங்கும், கம்பத்தாட்டம் நடக்கிறது.
ஆண்டு விழா
அரசூர், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், 'விருக்சம்' என்ற தலைப்பில் ஆண்டு விழா நடக்கிறது. கல்லுாரி கலையரங்கில், காலை, 10:00 மணிக்கு நடக்கும் விழாவில், பல்வேறு கலை நிகழ்வுகள் நடக்கின்றன.
போஸ்டர் தயாரிப்பு போட்டி
கருமத்தம்பட்டி, ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், போஸ்டர் வரைதல் போட்டி நடக்கிறது. 'என் ஆரோக்கியம் என் உரிமை' என்ற பெயரில், போஸ்டர் தயாரிக்கும் போட்டி, மதியம், 2:00 மணிக்கு நடக்கிறது.
விருது வழங்கும் விழா
நேரு தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், இன் - ஹவுஸ் விருது வழங்கும் விழா மதியம், 2:00 மணிக்கு நடக்கிறது. நேரு குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணதாஸ், சி.இ.ஓ., மற்றும் செயலாளர் கிருஷ்ண குமார் கலந்துகொள்கின்றனர்.
பட்டமளிப்பு விழா
குனியமுத்துார், சுகுணாபுரம், ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மதியம், 2:00 மணிக்கு பட்டமளிப்பு விழா நடக்கிறது.
* காளப்பட்டி ரோடு, சுகுணா பொறியியல் கல்லுாரியில், ஏழாவது பட்டமளிப்பு விழா, காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
புத்தகக் கண்காட்சி
மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், கோவை புத்தகத் திருவிழா என்ற தலைப்பில், புத்தகக் கண்காட்சி நடக்கிறது. நவஇந்தியா பேருந்து நிறுத்தம் அருகே, மீனாட்சி ஹாலில், காலை, 11:00 முதல் இரவு, 9:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், 'ரிதமிக் பேலட் தொடர்' என்ற, ஓவியக் கண்காட்சி நடந்து வருகிறது. பல்வேறு ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை, கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.

