/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மே 04, 2024 12:26 AM

குண்டம் திருவிழா
செல்வபுரம், பத்ரகாளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு பெரிய அபிஷேகம், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 80வது வட்டம், நாடார் வீதி, முனியப்பன் பத்ரகாளியம்மன் கோவிலின் குண்டம் திருவிழாவில், இரவு, 7:00 மணிக்கு, சுவாமி பெரிய ஊர்வலம் நடக்கிறது.
ஆன்மிக சொற்பொழிவு
ஆர்.எஸ்.புரம், பாரதீய வித்யா பவனில், காலை, 6:30 மணிக்கு, உத்தவ கீதையும், மாலை, 6:30 மணிக்கு, 'அபரோக்சானுபதி' என்ற தலைப்பில், ஆங்கில சொற்பொழிவு நடக்கிறது. பூஜ்யஸ்ரீ சுவாமி பரமார்த்தானந்தர் உரையாற்றுகிறார்.
சித்திரைத் திருவிழா
குனியமுத்துார், அறம் வளர்த்த அம்மன் கோவிலில், சித்திரைத் திருவிழா நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, பால்குடம் எடுத்து வருதல், மறுபூஜை, மகா அபிஷேகம், பரிவார தெய்வங்கள் அபிஷேகம், அன்னபிஷேகம், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
ஆண்டு திருவிழா
திருச்சி ரோடு, தி ஆயுர்வேதிக் டிரஸ்ட், ஸ்ரீ தன்வந்திரி கோவிலில், 48வது ஆண்டு திருவிழா நடக்கிறது. காலை, முளபூஜை, ஸ்தல சுத்தி, நாயசாந்தி ஹோமம், சோரசாந்தி ஹோமம், கலசாபிஷேகம், உச்சிகாலபூஜை நடக்கிறது. மாலை, முளபூஜை, ஸ்தலசுத்தி, அத்தாழபூஜை நடக்கிறது.
நாட்டிய விழா
ஸ்ரீ கிருஷ்ணா நாட்டிய கலாஷேத்ரா சார்பில், 45வது நாட்டிய விழா நடக்கிறது. ராம்நகர், கோதண்டராமர் கோவில், ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த பிரவச்சன மண்டபத்தில் மாலை, 4:00 மணிக்கு விழா துவங்குகிறது. நடன கலைஞர்கள் நடனம் அரங்கேற்றுகின்றனர்.
புற்றுநோயாளிகளுக்கு முடி தானம்
ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லுாரியில், புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு கூந்தலை தானமளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கல்லுாரி அரங்கில் நடக்கும் நிகழ்வில், டி.என்.ஏ.ஐ., தெற்கு மண்டல துணை தலைவர் ஜென்னி கேம்ப், நர்சிங் கல்வி தலைவர் ஜெயா சுதா கலந்துகொள்கிறார்.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில் 'பழிச்செயல்களை எவ்வாறு தவிர்க்கலாம்' என்ற தலைப்பில், இணையவழி பயிலரங்கம் நடக்கிறது. இரவு, 7:15 முதல் 8:15 மணி வரை நடக்கிறது.
சித்தா மருத்துவ ஆலோசனை
சாய்பாபாகாலனி, என்.எஸ்.ஆர்., ரோடு, சர்ச் வீதியில், வாசன் மெடிக்கேர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்தகத்தில், இலவச சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடக்கிறது. ஏ.வி.என்., ஆயுர்வேத நிறுவனம் இணைந்து நடத்தும் முகாம், மாலை 4:00 மணி முதல் நடக்கிறது. இதில், குடல் புண் சிறுநீரக கற்கள் பிரச்னைகளுக்கு, இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
புத்தகக் கண்காட்சி
மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், கோவை புத்தகத் திருவிழா நடக்கிறது. நவஇந்தியா பேருந்து நிறுத்தம் அருகே, மீனாட்சி ஹாலில், காலை, 11:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கிறது. மாலை, 5:30 மணி முதல் சிறப்புரை, பட்டிமன்றம் மற்றும் கவியரங்கம் நடக்கிறது.
வள்ளி கும்மி அரங்கேற்றம்
கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான, கும்மி ஆட்டத்தில் தமிழ் மணம் விருது பெற்ற பவளக்கொடி கும்மி குழுவின், 104வது அரங்கேற்ற விழா நடக்கிறது. சுண்டக்காமுத்துார், ராமசெட்டிபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மைதானத்தில் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர் சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடலாம். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது