/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மே 11, 2024 12:42 AM

ஆராட்டு உற்சவம்
குறிச்சி ஹவுசிங் யூனிட், பேஸ் - 1 விரிவாக்கம், தர்ம சாஸ்தா கோவிலில், ஆராட்டு உற்சவம் நடக்கிறது. காலை, 5:00 முதல் 9:00 மணி வரை, நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், பறையெடுப்பு, உச்சிகால பூஜை நடக்கிறது. மாலை, 5:00 முதல் 9:00 மணி வரை, அலங்கார தரிசனம், மகா தீபாராதனை, ஹரிவராசனம் நடக்கிறது.
ஆண்டு திருவிழா
ராமநாதபுரம், திருச்சி ரோடு, தி ஆயுர்வேதிக் டிரஸ்ட், ஸ்ரீ தன்வந்திரி கோவிலில், 48வது ஆண்டு திருவிழா நடக்கிறது. காலை, 6:00 மணி முதல் சிறப்பு பூஜைகள், உற்சவபலி, நிறபறை ஆகியவை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, சங்கீத நாட்டிய நாடகம் நடக்கிறது.
ஆதி சங்கர ஜெயந்தி உற்சவம்
ஆர்.எஸ்.புரம் வேதபாடசாலையில், ஆதி சங்கர ஜெயந்தி உற்சவம், காலை, 9:30 மணிக்கு நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், ஸ்ரீ சாரதாலயம் கோவிலில், காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை, சங்கர ஜெயந்தி உற்சவம் நடக்கிறது.
மணிமண்டபம் திறப்பு விழா
சவுரிபாளையம், ராஜீவ்காந்தி நகர், ராஜ கணபதி கோவில் பரிபாலன கமிட்டி டிரஸ்ட் சார்பில், ராமானுஜர் மணிமண்டபம் திறப்பு விழா நடக்கிறது. காலை, 9:00 மணி முதல் பல்வேறு பூஜைகளை தொடர்ந்து, மாலை, 5:30 மணிக்கு மணிமண்டபம் திறக்கப்படுகிறது. மாலை, 5:50 முதல், ராமானுஜர் தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
சித்திரைத் திருவிழா
துடியலுார், மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில், சித்திரைத் திருவிழாவில், இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு பூஜை நடக்கிறது. சிங்காநல்லுார், கள்ளிமடை, காமாட்சியம்மன், திருக்கல்யாண மாரியம்மன் கோவிலில், காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜையும், மாலை, 6:30 மணிக்கு, சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடக்கிறது. கற்பகம் உயர்க்கல்விக் கழக வளாகத்தில் உள்ள சேக்கிழார் அரங்கத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
ஸ்டைல் பஜார் கண்காட்சி
கோவை மாநகர பெண்கள் வட்டம் 23 வழங்கும் ஸ்டைல் பஜார் கண்காட்சி, தாஜ் விவாந்தா ஓட்டலில், இன்று துவங்குகிறது. காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடைபெறும் கண்காட்சியில், ஆடை, அணிகலன்கள், அழகுசாதன பொருட்கள் என புகழ்பெற்ற கலெக் ஷன் இடம்பெற்றுள்ளது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர் சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடலாம். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.