/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மே 11, 2024 11:25 PM

ஆராட்டு உற்சவம்
குறிச்சி ஹவுசிங் யூனிட், பேஸ் - 1 விரிவாக்கம், தர்ம சாஸ்தா கோவிலில், ஆராட்டு உற்சவம் நடக்கிறது. காலை, 5:00 முதல் 9:00 மணி வரை, நிர்மால்ய தரிசனம், உஷபூஜை, 108 திரவிய கலசாபிஷேகம், பறையெடுப்பு, பூதபலி, தீபாராதனை நடக்கிறது.
ஆண்டு திருவிழா
ராமநாதபுரம், திருச்சி ரோடு, தி ஆயுர்வேதிக் டிரஸ்ட், ஸ்ரீ தன்வந்திரி கோவிலில், 48வது ஆண்டு திருவிழா நடக்கிறது.
ஆதி சங்கர ஜெயந்தி உற்சவம்
ஆர்.எஸ்.புரம், வேதபாடசாலையில், ஆதி சங்கர ஜெயந்தி உற்சவம், காலை, 8:00 மற்றும் மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், ஸ்ரீ சாரதாலயம் கோவிலில், காலை, 8:00 முதல் இரவு, 7:00 மணி வரை, சங்கர ஜெயந்தி உற்சவம் நடக்கிறது.
திருக்கல்யாணத் திருவிழா
சூலுார், அத்தப்பகவுண்டன்புதுார், மகா மாரியம்மன் திருக்கல்யாணத்திருவிழா நடக்கிறது. சங்கமம் ஒயிலாட்ட கலை குழுவின் ஒயிலாட்டம், இரவு, 7:00 மணிக்கு நடக்கிறது.
சர்வதேச செவிலியர் தினம்
மதுக்கரை நைட்டிங்கேல் கல்லுாரி, கிணத்துக்கடவு எண்ணம் செவிலியர் கல்லுாரி மற்றும் சுந்தராபுரம் அன்னை மீனாட்சி செவிலியர் கல்லுாரிகள் இணைந்து, உலக செவிலியர் தினத்தை கொண்டாடுகின்றன. அன்னை மீனாட்சி செவிலியர் கல்லுாரியில்,மாலை, 5:00 மணிக்கு விழா துவங்குகிறது.
ஸ்டைல் பஜார் கண்காட்சி
கோவை மாநகர பெண்கள் வட்டம் 23 வழங்கும் ஸ்டைல் பஜார் கண்காட்சி தாஜ் விவாந்தா ஓட்டலில், இன்று துவங்குகிறது.
சிரிக்கலாம் வாங்க
கோவை நகைச்சுவை சங்கம் சார்பில், 'திரையிசைப் பாடல்கள் என்றென்றும்' என்ற தலைப்பில், நகைச்சுவை சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது. நவஇந்தியா, இந்துஸ்தான் கல்லுாரியில், மாலை, 6:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், பேராசிரியர் ஞானசம்பந்தன் உரையாற்றுகிறார்.