/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மே 26, 2024 12:46 AM

ஆன்மிக சொற்பொழிவு
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ஞான வேள்வி அக்சரமண மாலை தொடர் ஆன்மிக சொற்பொழிவு, 'சும்மா இரு' என்ற தலைப்பில் நடக்கிறது. ராம்நகர், ராமர் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு, ரமணர் பாடல்கள் மற்றும் ரமண சத்சங்கத்துடன் சொற்பொழிவு துவங்குகிறது.
பிரம்மோற்சவம்
பாப்பநாயக்கன்பாளையம், ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவம் நடக்கிறது. காலை, 5:00 மணிக்கு விஸ்வரூபம், சதுஸ்தானார்ச்சனம் நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு, சதுர்வீதி புறப்பாடு நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, 108 கலச திருமஞ்சனமும், மாலை, 6:00 மணிக்கு, சதுஸ்தானார்ச்சனமும் நடக்கிறது.
கும்பாபிஷேக விழா
அன்னுார், பாரதி நகர், கற்பக விநாயகர் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதி காலை, 6:30 மணிக்கு நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
திருவிழா
தடாகம் ரோடு, தெலுங்குபாளையம் பால்சொசைட்டி எதிரில், ஆர்.எஸ்.புரம், முத்து மாரியம்மன் கோவிலில், 64ம் ஆண்டு திருவிழா நடக்கிறது. இன்றுடன் நிறைவு பெறும் விழாவில், மதியம், 12:00 மணிக்கு மேல், அன்னதானம் நடக்கிறது.
சிலம்ப பயிற்சி விழா
செல்வசிந்தாமணி குளக்கரை பூங்காவின் நண்பர்கள் குழுவின் சிலம்பம் பயிற்சி கூடம் சார்பில், இலவச சிலம்ப பயிற்சி விழா நடக்கிறது. ஒன்பதாம் ஆண்டு விழா, காலை, 7:00 மணிக்கு துவங்குகிறது.
ஓவியப் போட்டி
தாய்மை அறக்கட்டளை சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தினம் மற்றும் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடக்கிறது. ஒன்று முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ளலாம். காமராஜர் ரோடு, என்.ஜி., ராமசாமி நினைவு உயர்நிலைப்பள்ளியில், காலை, 9:00 மணிக்கு போட்டி நடக்கிறது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மதுக்கரை ரோடு, டிரினிட்டி நகர், பிரசன்டேசன் கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்க துவக்க விழா நடக்கிறது. பள்ளி வளாகத்தில், மாலை, 3:00 மணிக்கு துவங்கும் நிகழ்வில், முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.
இலவச மருத்துவ முகாம்
வள்ளலார் வைத்தியசாலை மற்றும் திருவடி சமரச சத்திய சன்மார்க்க சபை சார்பில், கண், காது, மூக்கு கலிக்கம் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. அன்னுார், பழைய பேருந்து நிறுத்தம் அருகே, சரவண மஹாலில், காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.